பௌத்த சமயத்தின் புனித நூல்கள்

பௌத்த சமயத்தின் புனித மூலநூல் திபிடகம் என அழைக்கப்படுகின்றன. 'தி' என்றால் மூன்று என்றும் 'பிடகம்' என்றால் கூடை அல்லது தொகுப்பு என்ற இரு பாலி மொழி சொற்களின் சேர்க்கையாகும். எனவே, திபிடகம் என்பதற்கு "மூன்று கூடைகள்" அல்லது "மூன்று தொகுப்புகள்" என்று பொருள்.
புத்த பகவானின் போதனைகள் அனைத்தும் மூன்று பகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ளன:
1. சுத்த பிடகம்: இல்லறத்தினர், பிக்குகள் மற்றும் பிக்குணிகளுக்கு வழங்கிய போதனைகள் மற்றும் உரைகளின் தொகுப்பு.
2. விநய பிடகம்: பிக்குகள் மற்றும் பிக்குனீகளின் ஒழுக்க நெறிகள், விதிமுறைகள் மற்றும் துறவற வாழ்க்கைக்கான கட்டுப்பாடுகளின் தொகுப்பு.
3. அபிதம்ம பிடகம்: மனம், மனநிலைகள், அனுபவங்கள் மற்றும் உண்மையின் இயல்பை ஆழமாக ஆராயும் உயரிய தத்துவ மற்றும் உளவியல் போதனைகளின் தொகுப்பு.
புத்த பகவான் மஹாபரிநிப்பானம் அடைந்து முதல் பெளத்த சங்கம் கூடியபோது, அவரது போதனைகள் திபிடகமாக தொகுக்கப்பட்டது. இது கி.மு. முதலாம் நூற்றாண்டு வரை வாய்மொழியாக சங்கத்தால் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டன. பின்னர், கி.மு. முதலாம் நூற்றாண்டில் அவை பாலி மொழியில் எழுத்து வடிவில் பதிவு செய்யப்பட்டன. பாலி மொழியில் அமைந்துள்ள திபிடகம், ஆங்கில மொழிபெயர்ப்பில் நாற்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகளையும் சுமார் 20,000 பக்கங்களுக்கும் அதிகமான உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. உலகின் முக்கிய சமயங்களின் புனித நூல்களில் அளவிலும் உள்ளடக்கத்திலும் மிகப் பெரியதாகக் கருதப்படும் நூல்களில் திபிடகமும் ஒன்றாகும்.
நாங்கள் கடந்த 25 ஆண்டுகளாக புத்த விஹாருக்கு சென்று வழிபாட்டு முறைகளை தெரிந்துக்கொண்டோம். பெளத்த நூல்களை படித்தும், துறவியர்களிடம் சிலவற்றை கேட்டும் புத்தரின் வாழ்க்கை வரலாற்றையும், தம்மத்தையும் அறிந்துக் கொண்டுள்ளோம். ஜான (தியான) வகுப்புகளில் கலந்துக்கொண்டு தினமும் அவற்றை பயிற்சி செய்து வருகிறோம்.
சங்கத்தின் சமய நிகழ்ச்சிகள்
➤ நமது சங்க நிகழ்ச்சிகள் முழுவதும் புத்த, தம்ம, சங்க என்கிற மும்மணிகளை மட்டுமே கொண்டது.
➤ உபோசத நாட்களில் புத்த விஹாருக்கு (ஆலயம்) செல்லுதல்
➤ மூன்று வகையான நீர் ஆகாரம், பழங்கள் மற்றும் மலர்கள் படைத்தல்
➤ விளக்கு மற்றும் ஊதுபத்தி ஏற்றி புத்த பகவானை வழிபடுதல்
➤ பாலி மற்றும் தமிழ் மொழிகளில் பரித்த சுத்தங்களை ஓதுதல்
➤ குறைந்தது 30 நிமிடங்கள் கூட்டு ஜானத்தில் (தியான) ஈடுபடுதல்
➤ பௌத்தத் துறவிகளின் தம்ம சொற்பொழிவு கேட்டல்
➤ இவைகள் மூலம் நாம் அனைவரும் நல்வினைப் பலன்களைப் (புஞ்ஞ) பெறுவோம்
சங்கத்தின் சமய பணிகள்
➤ சங்க உறுப்பினர்களுக்கு பெளத்த வழிபாட்டு முறைப் பயிற்சி, ஜானப் (தியான) பயிற்சி, சுத்த ஓதுதல் பயிற்சி மற்றும் அடிப்படையான புத்த தம்மத்தை அறிந்துக்கொள்ளும் பயிற்சிகள் அளிக்கப்படும்
➤ சங்கத்தின் சார்பாக ஒவ்வொரு ஆண்டின் தமிழ் மற்றும் ஆங்கில பெளத்த மாதாந்திர காலண்டர் அச்சிடப்படும். இவை டிசம்பர் மாதம் 2ம் வாரத்தில் பெளத்த விஹாரில் துறவிகளால் வெளியிடப்படும். தேவைப்படுவோர் பணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம்.
➤ அன்றாட பெளத்த வழிபாட்டு புத்தகமும் சங்கத்தின் சார்பாக அச்சிடப்பட்டுள்ளது
➤ பெளத்த சமயத்தின் நான்கு முக்கிய புனித தலமான லும்பினி, புத்த கயா, சாரநாத், குசிநகருக்கு யாத்திரை செல்லுதல். மற்றும் சாவத்தி, இராஜ்கிரி, வெசாலி, சங்கிசா, சாஞ்சி தூபி மற்றும் அஜந்தா குகைகளுக்கு யாத்திரை செல்லுதல்.
➤ அன்றாட பெளத்த வழிபாட்டு புத்தகமும் சங்கத்தின் சார்பாக அச்சிடப்பட்டுள்ளது
➤ நமது சங்க உறுப்பினர் இருவர் பெங்களூரு மஹாபோதியில் தம்மாச்சாரி வகுப்பில் கலந்துக் கொண்டு பயிற்சி பெற்றிருக்கிறார்கள். குடும்பத்தில் நடக்கும் மங்கல நிகழ்ச்சிகளுக்கு அவர்களை அழைத்து சடங்கு முறையுடன் மங்கல நிகழ்வை நடத்தலாம்.
➤ உபாசகர்கள்/உபாசிகாகள் புத்தரின் வரலாறு & தம்மம் சார்ந்த விவாதங்களில் ஈடுபட்டு அவற்றை சரியாக புரிந்துக்கொள்ளுதல்
➤ பெளத்த சமயத்தின் நான்கு முக்கிய புனித தலமான லும்பினி, புத்த கயா, சாரநாத், குசிநகருக்கு யாத்திரை செல்லுதல். மற்றும் சாவத்தி, இராஜ்கிரி, வெசாலி, சங்கிசா, சாஞ்சி தூபி மற்றும் அஜந்தா குகைகளுக்கு யாத்திரை செல்லுதல்.
புத்தரின் தம்மத்தை அறிந்துக் கொள்ளவும் தம்மப் பணிகளை எங்களுடன் இணைந்து செயல்பட விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்

ஆறு அற்புத ஆற்றல்கள்
புத்த பகவான் உயர் மெஞ்ஞானத்தின் மூலம் உலக மற்றும் உலகிற்கு அப்பாற்பட்ட 73 உயரிய மெய்யறிவாற்றலை அடைந்தார்.
இதில் முக்கிய 6 அற்புத ஆற்றல்கள் (சாள்-அபிஞ்ஞா)
1. இத்ஹி-வித: (மந்திர ஆற்றல்): தண்ணீரில் நடத்தல், காற்றில் பறத்தல், மலைகளைக் கடந்து செல்லல், கண்ணுக்குத் தெரியாமல் மீண்டும் தோன்றி ஓர் உடலைப் பலவாகவும் பலவற்றை ஒன்றாகவும் மாற்றுதல்.
2. திப்ப சோத: (அதிசய காது): விண்ணுலகிலும், மண்ணுலகிலும் நிகழும் நுட்பமான ஒலிகளை கேட்டல்.
3. திப்ப சக்கு: (ஞாணக் கண்): ஓரிடத்தில் இருந்து கொண்டே ஞானக் கண்ணால் உலகில் உள்ள அனைத்து இடங்களையும், உயிரினங்கள் தங்கள் செயல்களுக்கு (கம்மா) ஏற்ப எவ்வாறு மீண்டும் தோன்றுகின்றன என்பதைப் பார்த்தல்.
4. பரஸ்ஸ சித்தோ-பரிய-ஞாண: மற்றவர்களின் மனதின் எண்ணங்களை ஊடுருவி அறிதல்.
5. புப்பே-நிவாசானுஸ்ஸதி: முற்பிறவிகளையும் அறிதல்.
6. ஆசவக்கய: உணர்தல் மூலம் மனத்தில் உள்ள மன அசுத்தங்களை அழித்தல்.

ஆறு அசாதாரண ஞாணங்கள்
1. இந்திரிய பரேபரியட்ட: ஐந்து ஆன்மீக திறன்களின் மூலம் கட்டுப்படுத்தும் கொள்கை.
2. அசயானுஸயா: உயிரினங்களின் இயல்புகள் மற்றும் அடிப்படையான மனப்பாங்கு பற்றிய அறிவு.
3. யமகபதிஹர: புத்த பகவான் சாவத்தியில் நிகழ்த்திய இரட்டை அற்புதங்கள் (Twin Miracles).
4. மஹா கருணசமபத்திய: உயர்ந்த கருணையை அடைதல்.
5. சப்பனுத்த: சர்வ ஞானத்தினை அறிதல்.
6. அனவரன: தடையற்ற தன்மை பற்றிய அற்புத ஆற்றல்.
பரித்த பரிகம்ம (குடும்பத்தினரின் நலன் காக்கும் புத்த பகவானின் அருளுரைகள்)

சீலங்களை கடைப்பிடித்து பரித்த சுத்தவை ஓதுவதால் உண்டாகும் நன்மைகள்:
1. மங்கல சுத்த: நலமுடனும் வளமுடனும் வாழ அற்புதமான ஆசீர்வாதங்கள்.
2. ரதன சுத்த: நோய், தீய ஆவிகள் மற்றும் பஞ்சத்தால் ஏற்படும் துன்பத்திலிருந்து விடுபட.
3. மெத்தா சுத்த: அன்பான நேயத்துடன் நல்ல உறக்கம், ஆபத்திலிருந்து காத்தல் மற்றும் மகிழ்ச்சி அடைதல்.
4. கந்த சுத்த: பாம்புகள் மற்றும் பிற கொடிய விலங்குகளின் தாக்குதலிருந்து காத்தல்.
5. மொர சுத்த: சூழ்ச்சிகள் மற்றும் சிறைவாசத்தின் ஆபத்தில் இருந்து பாதுகாத்தல்.
6. வட்ட சுத்த: நெருப்பு விபத்தில் இருந்து காத்தல்.
7. தஜக்ஃ சுத்த: பயம், நடுக்கம் மற்றும் திகில் ஆகியவற்றிலிருந்து காத்தல்.
8. ஆடானாடிய சுத்த: தீய சக்திகளை விரட்டி குடும்ப நலனைக் காக்கவும், உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் அடைவதற்கும்.
9. அங்குலிமால சுத்த: கருவுற்ற பெண்கள் குழந்தையை நலமுடன் பெற்றெடுக்க.
10. போஜ்ஜங்க சுத்த: குன்றிய உடல் நலத்திலிருந்து விடுபடவும், நோயிலிருந்து காக்கவும்.
11. புப்பங்ஹ சுத்த: அனைத்து தீய சகுனங்களில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சி பெற.
